
சிறந்த இயக்குனராய் திகழும் செல்வராகவன், தற்போது நடிகராகவும் களமிறங்கவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வராகவன்.
செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார்.
யாமினி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம் செய்யும் இந்த படத்திற்கு நாகூரான் எடிட்டிங் செய்யவிருக்கிறார்.
தற்போது ‘சாணிக் காயிதம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமேசான் தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]