இந்தியாவில் மிகப்பெரும் படமாக பார்க்கப்படும் சாஹோ திரைப்படம், வரும் 30ம் தேதி, பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாக உள்ளது. படம் வெளியாவதற்கு இன்னமும் 48 மணி நேரங்களே உள்ள நிலையில், தேசிய அளவில் உள்ள பிரபாஸின் ரசிகர்கள் இப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய சூழலில், அவர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரக சென்சார் போர்டு உறுப்பினரும், சினிமா விமர்சகருமான உமெர் சாந்து, கடந்த 23ம் தேதியே படத்தை பார்வையிட்டு, அது தொடர்பாக பதிவு ஒன்றை டுவிட்டரில் மேற்கொண்டிருக்கிறார்.
பிரபாஸ் படத்திற்குள் வரும் காட்சியை கொண்ட முதல் பகுதியை பைசா வசூல் என்று வர்ணித்துள்ள அவர், சாஹூ படத்தின் முதல் பகுதி பெரும் வரவேற்பை பெறும் என்றும், ஆக்ஷன் ஸ்டன்ட் காட்சிகள் மற்றும் ஹீரோ வில்லன்களை துரத்தும் காட்சிகள் என்று ரசிகர்களுக்கு பெரும் விருந்தே காத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, படத்தில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வண்ணம், பிரபாஸ் ஒரு எதிராளி போன்று சித்தரிக்கும் ஒரு காட்சியும் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், இது ஒரு மிகப்பெரும் திருப்புமுனை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபாஸ் அத்தகைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது பெரும் திருப்புமுனையாக ரசிகர்களுக்கு இருக்கும் என்றாலும், அவர் தான் படத்தின் ஹீரோ. ஒரு சாதுவான திருடனாக அவரை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
கடைசியாக, மிகப்பெரும் எண்டர்டெயின்மென்ட் கொண்ட படமாக இப்படம் இருக்கும் என்றும், ரசிகர்களுக்கு பெரும் விருந்தை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் தனது கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளதாகவும், முந்தைய அவரின் படத்தின் சாதனை தகர்த்து, புதிய சாதனைகளை இப்படம் அவர் மூலம் மேற்கொள்ளும் என்றும் உமெர் சாந்து தெரிவித்துள்ளார்.
மிகவும் எதிர்ப்பை ஏற்படுத்தும் சண்டை காட்சிகள், பிரபாஸ் – ஷ்ரத்தா கபூர் இடையேயான காதல் காட்சிகள், படத்திற்கு பெரும் ஆரவாரத்தை ரசிகர்கள் மத்தியில் பெரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்