பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம் சாஹோ. இதில் ஷ்ரத்தா கபூர் , ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, அருண் விஜய், ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சுஜீத் எழுதி இயக்கியுள்ள இந்த படம் ரூ.250 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரானது . தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்தப் படம் நேற்று திரைக்கு வந்தது.
படத்தை பற்றி பாசிட்டிவான விமர்சனங்கள் பெரிதாக வரவில்லையென்றாலும் ரிலீஸான முதல் நாளிலேயே 100 கோடியைக் கடந்து சாதனை படைத்த ‘சாஹோ’ இரண்டாம் நாளில் உலக அளவில் ரூ.205 கோடியைக் கடந்தது. ‘சாஹோ’ இந்தியாவில் ‘அவஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தின் சாதனையை எளிதாய் முறியடித்தது. விநாயகர் சதுர்த்தி தினமான திங்கள் கிழமையிலும் ரூ.14.20 கோடியைக் குவித்துள்ளது. வெளியான 4 நாட்களில் இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் தகர்த்தெறிந்து ரூ.330 கோடியைக் குவித்துள்ளது.