டில்லி:
இன்போசிஸ் புதிய தலைமை செயல் அதிகாரியாக சலில் எஸ்.பரேக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் இயக்குனராக பதவி வகித்த விஷால் சிக்கா ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து தற்காலிக இயக்குனராக யூ.பி.பிரவின் ராவ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சாலில் எஸ் பாரீக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜனவரி 2-ம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவர் 5 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார். சலில் எஸ்.பரேக் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலை பொறியியல் கல்வி, எந்திர பொறியியல் கல்வியையும் முடித்துள்ளார். மும்பை ஐஐடி.யில் ஏரோ நாட்டிகல் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ஐடி சர்வீசஸ் துறையில் உலகளாவிய அளவில் இவருக்க 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.