புதுடெல்லி:
எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் சாஹோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதை இதுவரை ஆறு முறை வென்றிருக்கிறார் எஸ்பிபி. இவர் பெற்ற மாநில அரசு விருதுகளுக்கும் தனியார் விருதுகளுக்கும் கணக்கே கிடையாது. தன்னுடைய ஐம்பதாண்டு கால தொழில் வாழ்க்கையில் எல்லா மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 40,000 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கும் எஸ்.பி.பி. கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]