சென்னை: தமிழக போக்குவரத்துத்துறையின் புதிய ஆணையராக எஸ்.நடராஜனை நியமனம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழக போக்குவரத்துத்துறை ஆணையராக இருந்த சந்தோஷ் கே.மிஸ்ரா விருப்ப ஓய்வு பெற்றதை தொடர்ந்து, போக்குவரத்து துறையின் புதிய ஆணையராக போக்குவரத்துத்துறை சிறப்புச்செயலாளர் எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவ தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்து உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சந்தோஷ் கே மிஸ்ரா, 2000ம் ஆண்டு நேரடி ஐஏஎஸ் அதிகாரியாவார். இவர் தொடக்க காலத்தில் சட்டிஸ்கர் மாநிலத்தில் பணியாற்றினார். அதன்பின் மீண்டும் தமிழகப்பணிக்கு வந்த அவர், நுகர்பொருள் வாணிபக்கழகம் மேலாண் இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் நியமிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையராக இருந்து வந்தார்.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சந்தோஷ் கே மிஸ்ரா அநத் பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டு, மாநில போக்குவரத்துத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அவர், சொந்த காரணங்களுக்காக விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு அவருக்கு விருப்ப ஓய்வு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, போக்குவரத்துத்துறையின் புதிய ஆணையராக, அத்துறையில் சிறப்பு செயலராக இருந்த எஸ்.நடராஜனை நியமித்து தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.