பெங்களூரு,
காங்கிரஸில் இருந்து விலகிய, கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, பாஜகவில் இணைய இருக்கிறார் என்று அக் கட்சியின் கர்நாடாக மாநில தலைவர் எடியூரப்பா இன்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக வும் கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா சமீபத்தில் அறிவித்தார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதினார்.
இந்த நிலையில் எஸ்.எம். கிருஷ்ணா, பாஜகவில் இணைய இருக்கிறார் என்று அக் கட்சியின் கர்நாடாக மாநில தலைவர் எடியூரப்பா இன்று தெரிவித்துள்ளார்.
மக்களவை உறுப்பினராக மாண்டியா தொகுதியில் இருந்து கடந்த 1968-ம் ஆண்டு தேர்வு செய்யப் பட்ட எஸ்.எம்.கிருஷ்ணா, பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரது அமைச்சரவைகளில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் 1999-ஆம் ஆண்டு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பதவியேற்ற அவர், அதே ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்த லில் காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம் முதல்வராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா ஆளுநராகவும், மீண்டும் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில், மேலிடத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கட்சிப் பணியாற்றுவதற்காக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
பெங்களூரில் தங்கியிருந்த கிருஷ்ணா, முதல்வர் சித்தராமையா, மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் உள்ளிட்டவர்களால் தொடர்ந்து தாம் புறக்கணிக்கப்பட்டுவதாக வருத்தத்தில் இருந்தார்.
இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும், அரசியலில் ஈடுபடப்போவ தில்லை என்றும் அறிவித்தார். ஆனால், அவர் பாஜகவில் இணைய இருப்பதாக, கர்நாடக பாஜக தலைவரா் எடியூரப்பா தற்போது அறிவித்துள்ளார்.