மாஸ்கோ: ரஷ்யாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  52 ஆக உயர்ந்தள்ளது.

ரஷியாவின் தலைநகரம் மாஸ்கோவில் இருந்து 3,500 கி.மீட்டர் தூரத்தில். சைபீரியா பகுதியில் லிஸ்ட்வேஸ்னியா என்ற இடத்தில் மாபெரும் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். சுரங்கத்தின் காற்றோட்டத்துக்காக ஏராளமான குழிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த குழி ஒன்றில் உள்ள நிலக்கரி துண்டில் திடிரென தீபிடித்து மளமளவென பரவியது.

இந்த கோர து விபத்தில், உள்ளே பணியாற்றி கொண்டிருந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தொடங்குவதற்குள் பலர் தீயில் சிக்கி கருகினர் ஏராளமானோர் தீக்காயத்துடன் தப்பி வந்தனர்.

இந்த கோர விபத்தில் சுரங்கத்தினுள்  52 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்து உள்ளதாகவும், 49 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த தீ விபத்துக்கு கவனக்குறைவே காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக  சுரங்க நிறுவன அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.