மாஸ்கோ:  ஏப்ரல் 1முதல்  பிற நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதிக்கிறது உள்நாட்டு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில், ரஷ்ய அரசாங்கம் வெள்ளிக்கிழமை அன்று, ஏப்ரல் 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதாக அறிவித்தது. இதன் நோக்கம், உள்நாட்டு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிப்பதும், எரிபொருள் விலைகளை நிலைப்படுத்துவதும் ஆகும்.

ஈரான், அமெரிக்கா – இஸ்ரேல் போா் காரணமாக உலக நாடுகளிடையே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு வளைகுடா நாடுகள் எரி பொருட்களை சப்ளை செய்துவந்த நிலையில், அந்த நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல பெட்ரோலிய வயல்கள்  பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் ஈரான் தனது நாட்டின் அருகே உள்ள,  பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோா்முஸ் நீரிணையை மூடியுள்ளது. இதனால்,   அவ்வழியாக அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் நட்பு நாடுகளின் கப்பல்களை அனுமதிக்க முடியாது என்றும் மீறினால் தாக்குதல் நடத்துவோம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. இதனால்  கப்பல் மூலம் எரிவாயுக்கள், கச்சா எண்ணை எடுத்துச் செல்வது  தடுக்கப்பட்டு உள்ளது.

இதரன் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

வளைகுடா நாடுகளுக்குப் பதிலாக ரஷியாவில் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியா தற்போதைய நிலைமையை சமாளித்து வருகிறது. எனினும் இந்தியாவில் போதிய அளவு சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் இருப்பு உள்ளதாக மத்திய அரசு கூறி வருகிறது.

இந்த நிலையில் ரஷியா ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேற்காசியப் போரால் ரஷியாவில் எரிபொருள் விநியோகத்தைச் சரிசெய்ய ஏப்ரல் 1 முதல் பிற நாடுகளுக்கு பெட்ரோல் ஏற்றுமதி தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

உள்நாட்டில் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கவும் எரிபொருள் விலைகளை நிலைப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரஷியா கூறியுள்ளது. ரஷிய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

பிறநாடுகளில் ரஷிய எரிசக்திக்கான தேவை வலுவாக இருந்தாலும், மேற்கு ஆசியாவில் தொடரும் போரால் உலகளாவிய எண்ணெய், பெட்ரோலியப் பொருள்களின் விலைகளில் ஏற்ற. இறக்கங்களை ஏற்படுத்துகிறது என்றும் ரஷியாவில் விலை உயர்வதைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு சுமார் 1,20,000 முதல் 1,70,000 பீப்பாய்கள் ரஷியா, பெட்ரோல் ஏற்றுமதி செய்து வருகிறது. சீனா, துருக்கி, பிரேசில், ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ரஷியாவிடம் இருந்து அதிகமாக பெட்ரோல் பெறுகின்றன. ரஷியாவின் இந்த அறிவிப்பு நட்பு நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

[youtube-feed feed=1]