நியூயார்க்
கடந்த 5 மாதங்களில் 20000க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறி உள்ளது.
கடந்த ஆண்டு நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பும், அமெரிக்காவும் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன. அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கெர்பி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
ஜான் கெர்பி, “ரஷ்யாவுக்கு உக்ரைன் போரில் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய வீரர்கள் சுமார் 20000க்கும் மேற்பட்டோர் உக்ரைன் போரில் கடந்த 5 மாதங்களில் கொல்லப்பட்டுள்ளனர். தவிர 80000 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பஹமத என்னும் நகரை ரஷ்யா கைப்பற்றும் போது இந்த உயிரிழப்பு நடந்துள்ளது. இந்நகரின் பெரும்பகுதியை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. ஆனால் இன்னும் சில பகுதிகள் உக்ரைன் நாட்டின் கட்டுப்பாட்டில் இன்னமும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஷ்யா எவ்வித கருத்தும் இதுவரை தெரிவிக்கவில்லை.