மாஸ்கோ

கொரோனா பாதிப்பு எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகமாக உள்ளதாக மாஸ்கோ மேயர் அச்சம் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது.  அமெரிக்காவிலும் அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளன.   ஐரோப்பியாவில் உள்ள இத்தாலி போன்ற நாடுகள் தற்போது சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றன.  ஆனால் ரஷ்யாவில் மட்டும் மிகவும் அதிகரித்து வருகிறது.

இது குறித்து ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோ நகர மேயர், நேற்று முன் தினம், “ரஷ்யாவில் எதிர்பார்த்ததை விட மிக அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது.  தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 2.5 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.  இது மொத்த மக்கள் தொகையில் 2% ஆகும்.  நகரில் பாதிப்பு ஏற்பட்டதைப் போல் நான்கு மடங்காகும்.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஞாயிறு அன்று சுமார் 10000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஆனால் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இருந்தே ரஷ்யாவில் தாக்கம் உள்ளதாகவும் ஆனால் இதை ரஷ்யா மறைத்துள்ளதாகவும் சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர்.  ஆனால் கடந்த ஆறு வாரங்களாக ரஷ்யாவில் கொரோனா பரவி வருவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.