மாஸ்கோ: ஜனநாயகத்தின் நவீன முறைப்படி அமெரிக்க தேர்தல் நடைபெறவில்லை என்று விமர்சித்து, டொனால்ட் டிரம்ப்பிற்கான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது ரஷ்யா.

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன், தேர்தலில் தேர்வான எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து, தற்போதைய அதிபர் டிரம்ப்பின் சமூகவலைதள பதிவுகள் வெளியாகின.

அதன்விளைவாக, தலைநகரில் குவிந்த அவரின் ஆதரவாளர்கள், வன்முறையில் ஈடுபட்டனர். இதனால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 4 பேர் பலியாகினர்.

டொனால்ட் டிரம்ப்பிற்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் உலகின் பல நாடுகளிலிருந்து கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், ரஷ்யாவிடமிருந்து வித்தியாசமான கருத்து வெளிப்பட்டுள்ளது.

“அமெரிக்க தேர்தலானது, ஜனநாயகத்தின் நவீன முறைப்படி நடத்தப்படவில்லை. டிரம்ப்பின் ஆதரவாளர்களின் வன்முறைப் போராட்டம் ஒருபக்கம் இருந்தாலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் விதிமீறல்கள் உள்ளன” என்று கூறியுள்ளார் ரஷ்ய வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர்.