ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான தகவல் முற்றிலும் கற்பனையானது என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் குடியரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியுடன் ரஷ்ய அதிபர் பேச்சு நடத்துவதற்கான எந்த ஒரு திட்டமும் இல்லை என்று உறுதிபட தெரிவித்தனர்.

“இது முற்றிலும் பொய்யானது, இது தூய கற்பனை” என்று கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.

உக்ரைன் போரை அதிகரிக்க வேண்டாம் என்று புடினிடம் டிரம்ப் கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனமும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் புடின் – டிரம்ப் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக வெளியான தகவல் முற்றிலும் கற்பனையானது என்று ரஷ்யா விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.