மாஸ்கோ:
அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே பதற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினின் செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோ நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தொடரும் மிரட்டல் அறிக்கைகளால் கொரியா தீபகர்ப பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை கவலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த பதற்றம் மேலும் அதிகரிக்காமல் த டுப்பதில் ஆர்வலமுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. வட கொரியான அணுசக்தி திட்டத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதில் ரஷ்யா உறுதியாக உள்ளது’’ என்றார்.
கடந்த 19ம் தேதி ஐநா பொது சபையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபரை ராக்கெட் மனிதர் என்றும், அமெரிக்காவை தொடர்ந்து மிரட்டினால் வடகொரியா முற்றிலும் அழிக்கப்படும் என்று பேசினார்.
இந்த பேச்சுக்கு வட கொரியா எதிர்ப்பு தெரிவித்தது. டிரம்புக்கு மன நிலை சிரியல்லை. வடகொரியாவை அழிப்போம் என்று பேசியதற்கு உரிய விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து அமெரிக்கா வடகொரியா மீதான பொருளாதார தடையை உயர்த்தியது. அந்நாட்டில் அணு ஆயுத அதிரிப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஆணு ஆயுத சோதனை மற்றும் ஜப்பான் வான் பகுதியில் 2 ஏவுகணைகளை வடகொரியா வெடிக்க செய்தது.
‘‘இந்த பதற்றமான சூழ்நிலையில் எல்லை தாண்டிய ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை நடத்த வடகொரியா திட்டமிட்டு வருகிறது’’ என்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ரி யோங் ஹோ தெரிவித்துள்ளார்.