ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) மற்றும் இந்தியாவின் பானாகியா பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவங்கி இருக்கிறது.

ரஷ்யாவில், 2020 டிசம்பர் 5 முதல் 2021 மார்ச் 31 வரை ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தரவுகளின் அடிப்படையில் 97.6 சதவீத செயல்திறன் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இந்த மருந்தை அவசர கால தேவைக்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.

ஹிமாச்சல பிரதேச மாநிலம் பட்டியில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் இந்த தடுப்பூசியின் முதல் கட்ட தயாரிப்பு பணிகள் முடிந்ததும், அந்த மருந்துகள் ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்படும்.

தர கட்டுப்பாடுகள் உறுதிசெய்யப்பட்ட பின் இதன் முழு உற்பத்தி ஓரிரு மாதங்களில் துவங்கும் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.