Russia Announces Visa-Free Travel for Indians in The Country’s Far East

 

ரஷ்யாவின் தூரக்கிழக்கு பிராந்தியத்திற்கு இந்தியர்கள் இனி விசா இல்லாமல் பயணிக்கலாம்.

 

கிழக்கு சைபீரியாவுக்கும் பசிபிக் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட ரஷ்யாவின் தூரக்கிழக்கு பிராந்தியம் பசுமையும், புராதன அடையாளங்களும் மிக்க பகுதியாகும்.  அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக இந்தியா உள்ளிட்ட 18 நாட்டைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதாக பிரதமர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

 

அல்ஜீரியா, பஹரின், புருனே, ஈரான், ஈரான், கட்டார், சீனா, வடகொரியா, குவைத், மொராகோ, மெக்சிகோ, ஐக்கிய அரபு நாடுகள், சவுதி அரேபியா, சிங்கப்பூர், துனிசியா, துருக்கி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் விசா இன்றி பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். தூரக்கிழக்கு பகுதியின் சுற்றுலா சார்ந்த வளர்ச்சிக்காகவும், முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், வெளிநாட்டினருக்கு விசா இல்லாப்பயண அனுமதியை வழங்க முடிவு செய்ததாக விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.