மாஸ்கோ: உக்ரைனில் சிக்கியுள்ள வெளிநாட்டிரை மீட்கும் வகையில், உக்ரைன் மீது இன்று ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷியா அறிவித்து உள்ளது.
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் இன்று 14வது நாளாக தொடர்ந்து வருகிறது. இடையில் வெளிநாடுகளில் கோரிக்கையை ஏற்று, அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் வெளியேறும் வகையில் 4 முக்கிய நகரங்களில் ரஷ்யா போர் நிறுத்தம் செய்திருந்தது. இருந்தாலும் இன்னும் முழுமையாக வெளிநாட்டினர் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாத நிலை உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட நகரங்கள் உணவு, மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் தொடர்ந்து அவதிப்படுகின்றன இன்று ஒருநாள் மட்டும் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.
இதற்கிடையில், இரு நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில், மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படாத நிலையில், உக்ரைன் மீதான போர் இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தம் என ரஷ்யா தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் உள்பகுதியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானோர் அங்கிருந்து வெளியேற முடியாத நிலையில், அவர்கள் வெளியேறும் வகையில் இன்று ஒருநாள் போர் நிறுத்தம் செய்யப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.