சென்னை:
வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை நீதிமன்ற பதவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவுக்கு எதிராக மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் என திமுக வழக்கு தொடர்ந்தது. மாநில தேர்தல் ஆணையமும் வாக்கு எண்ணிக்கை நடவடிக்கை களை வீடியோ கேமரா மூலம் கண்காணிப்பதாக தேர்தல் ஆணையமும் உத்தரவாதம் அளித்தது.
அதையடுத்து, வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்கப்படும் வீடியோ பதிவுஉயர்நீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு தடை விதிக்க ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த மனுமீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.