சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நான்கு நாள்கள் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான . ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.
அதன்படி முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை (புதன்கிழமை/அக்.6) அன்றும், 2வது கட்ட தேர்தல் வரும சனிக்கிழமை (அக். 9) தேதிகளிலும் நடைபெற உள்ளது. மேலும், , 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் வரும் சனிக்கிழமையும் (அக்.9) நடைபெற உள்ளது.
முதற்கட்ட தேர்தல் நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகள் அக்டோபர் 6ஆம் தேதிவரை திறக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு நாளன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் நான்கு நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.