சென்னை:
திருச்சியில் காவலர் வாகனசோதனையில் மரணமைடாந்த கர்ப்பிணிப்பெண் உஷா குடும்பத்துக்கு அரசு ஏழு லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நேற்று (மார்ச் 7) தனது கணவர் தர்மராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார் உஷா என்ற கர்ப்பிணி. தர்மராஜா ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டினார். காலவர்கள் தடுத்து நிறுத்த முயன்றபோது நிற்காமல் செல்ல முயன்றார், அப்போது அவரது வாகனத்தை ஆய்வாளர் காமராஜ் உதைக்க.. நிலை தடுமாறி தர்மராஜ் – உஷா தம்பதி விழுந்தனர். அப்போது பின்னால் இருந்து வந்த வாகனம் ஏறியதில் உஷா பலியானார்.
வாகனத்தை எட்டி உதைத்த ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் உஷாவின் குடும்பத்துக்கு ஏழு லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.