ஜாம்நகர்: குஜராத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது திருமண ஊர்வலத்தில் ரூ.90 லட்சம் வரை பண மழைப் பொழிந்து, ஹெலிகாப்டரில் பறந்து சென்று திருமணம் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த தொழிலதிபர் ஜாம் நகர் பகுதியைச் சேர்ந்த ரிஷி ராஜ் சிங் ஜடேஜா. வடமாநிலங்களில் பல திருமணங்களில் பண மழைப் பொழிவது என்ற மோசமான விஷயத்தை ஒரு வழக்கமாக வைத்துள்ளனர் பலர்.
அந்தவகையில், இந்த ரிஷி ராஜ் தனது திருமணத்தில் பணத்தை வாரியிறைத்தார். இவரின் திருமணம் நவம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற்றது.
மணமகன் வீட்டார் மற்றும் நண்பர்கள் சேர்ந்து பொழிந்த பணமழையின் மதிப்பு ரூ.90 லட்சம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மணமக்கள் ஹெலிகாப்டர் மூலம் கண்ட் என்ற கிராமத்திற்குச் சென்றனர். அங்கு சென்றவுடன், சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள காரை, மணமகளுக்கு பரிசளித்தார் மணமகனின் அண்ணன்!