பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் இன்று காலை ஒடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் இருந்து , பேருந்தின் தானியங்கி கதவு சாலையில் கழன்று விழுந்ததால், அந்த பகுதியில் வந்த  வாகன  ஓட்டிகள், பொதுமக்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு புதுப்புதுப்பேருந்துகளை வாங்கி இயக்குவதாக கூறி வருகிறது. அவ்ப்போது புதுப்பேருந்துகளையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். ஆனால், இதுபோன்ற  புதுப்பேருந்துகள் சென்னை போன்ற முக்கிய பகுதிகளில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாக,   இங்குள்ள பழைய பேருந்துகள், மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால்  மற்ற மாவட்டங்கள் மற்றும் புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில் இயக்கப்படும் பழைய பேருந்துகள் அவ்வப்போது மக்கர் செய்வதுடன், அதன் பகுதிகள் திடீர் திடீரென ஆங்காங்கே கழன்று விழுந்து மக்களை பயமுறுத்தி வருகின்றன.

ஏற்கவே திருச்சி அருகே ஓடும் அரசு  பஸ்ஸில் இருந்து நடத்துனர்  இருக்கை கழன்று , நடத்துனர் வெளியே தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் நடத்துனருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது பொதுமக்கள் மட்டுமின்றி போக்குவரத்து துறை ஊழியர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி, பழனியில் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தின்  மேற்கூரை, அங்கு அடிக்க காற்றில்  பறந்து விழுந்த  விவகாரம் பொதுமக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி தென்காசி  பகுதியில்  ஓடும் பஸ்சின் அச்சு முறிந்து பேருந்தின் பின்பக்க டயர்கள் தனியே கழன்று ஓடியது. இதனால் ஏற்பட்ட விபத்தில்   3 மாணவர்கள் காயம் அடைந்தனர்.  இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாடு முழுவதும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது பொள்ளாச்சி பகுதியில், பேருந்தின் கதவு கழன்று விழுந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  அரசு பேருந்துகளின் அவலம்  பொதுமக்களிடையே அரசு மீதான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே சென்னையில் ஒரு அரசு பேருந்தின் கதவு கழன்று விழுந்த சம்பவம்  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று  சென்னை எண்ணூரில் ஒடிக்கொண்டருந்த அரசு பேருந்தில், இருந்து ஆபத்தை விளைவிக்கும் வகையில் கதவு கழன்று விழுந்தது.   இதில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர் காயமடைந்ததாகவும்  கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தின் கதவு, பொள்ளாச்சி வால்பாறை சாலையில் திடீரென கழன்று சாலையில் விழுந்தது.  கழவு விழுந்த நேரத்தில் சாலையோரம் இருந்த பொதுமக்களும், பின்னாடி வந்த வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஒடினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை.  பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த  தானியங்கி கதவு வேலை செய்யாத நிலையில், அதை சரிசெய்ய பல முறை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அதிகாரிகளிடம் முறையிட்டும், பேருந்தை முறையாக பராமரிக்காத நிலையில், இன்று சாலையில் கதவு கழன்று விழும் அவலம் நடைபெற்றுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில்,   அடிக்கடி நடப்பதாகவும், பேருந்துகளின் கதவுகள் சரியாக மூடப்படாமல் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ இதுபோன்ற  சம்பவங்களால் திமுக அரசு மீது மக்களின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகாரித்து வருவதுடன்,  பேருந்துகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து  மக்களிடையே கவலைகளை எழுப்புகின்றன. 

ஓடும் பஸ்ஸில் இருக்கை கழன்று சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்! அரசு பேருந்தின் அவலம்

தொடரும் அவலநிலை: ஆடிக்காற்றில் அரசு பேருந்தின் டாப் கழன்று விழுந்து அதிர்ச்சி! இது பழனி சம்பவம்…

அரசு பேருந்துகளின் அவலம் – ஓடும் பஸ்சின் அச்சு முறிந்து விபத்து – 3 மாணவர்கள் காயம்!