சென்னை:

ப்ரல் 1ந்தேதி முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி வதந்தி என்றும், மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் தமிழக மின்சார வாரியம் அறிவித்து உள்ளது.

ஏப். 1 முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த மாதத்துடன் 4 சதவிகிதம் சர்ஜார்ஜ் வசூலிக்கப்படும் என செய்தி பரவியது. சமூக வலைதளங்களிலும் இதுபோன்ற தகவல்கள் வெளியாகி புதிய பட்டியலும் வெளியானது.

இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மின் கட்டணம் உயர்த்தியிருப்பதாக வரும் செய்திகள் வதந்தி என்றும், தற்போத  மின்கட்டண உயர்வுக்கான அறிகுறிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்றும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.