சென்னை

கொரோனா வைரஸ் குறித்து அலைபேசியில் கூறப்படும் தகவல்களை நிறுத்துவது எப்படி எனப் பல வதந்திகள் கிளம்பி உள்ளன.

மொபைல் மூலம் அழைக்கும் போது ஒரு கொரோனா விழுப்புண்ர்வு தகவல் ஒலிக்கப்படுகிறது   அதன்படி நாம் நம்பரை டயல் செய்ததும் லொக் லொக் என இருமல் சத்தம் கேட்கிறது.   அதன் பிறகு கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல் ஒலிபரப்பாகிறது.   இந்த அறிவிப்பு சிலருக்கு எரிச்சலை அளித்துள்ளது.

அவர்களுக்கு ஆறுதல் அளிப்பது போல் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.   அதன்படி இந்த தகவல் அதாவது இருமல் சத்தம் கேட்டவுடன் நம்பர் ஒன்றை அழுத்தினால் அந்த செய்தி உடனடியாக நின்றுவிடும் என கூறப்படுகிறது  பலரும் அதை நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் அது வதந்தி என தற்போது தெரிய வந்துள்ளது.   பலரும் இந்த வதந்தியை உண்மை என நம்பி எண் ஒன்றை அழுத்தினாலும் அந்த செய்தி தொடர்ந்து முழுவதுமாக ஒலிக்கிறது..  இது குறித்து ஒரு நெட்டிசன் தாம் 1 2 3 4 5 6 7 8 9 0 * # என அனைத்தையும் அழுத்தியும் முழு இருமலையும் கேட்டதாக நகைச்சுவையாக பதிந்துள்ளார்