சென்னை:
துவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக  தேர்தல் ஆணையம் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (6-ந் தேதி) காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினம் அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 மாநிலங்களில் இதுவரை ரூ.815 கோடி நகை, பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், வாக்குப்பதிவு நாளன்று வாகனம் பயன்படுத்துதல் தொடர்பான தேர்தல் அலுவலர்களால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை பின்பற்றி ஒத்துழைப்பு நல்க வேண்டும். வாகன அனுமதி சீட்டினை வெளியில் தெரியும் வண்ணம் காட்சிப்படுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.