தமிழகத்தில் ஆட்சி: பகல் கனவு காண்கிறது திமுக! வைகோ..

Must read

நாகர்கோயில்,
மிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதாக கூறுவது, பகல் கனவு காண்பது போலானது என்று வைகோ கூறினார்.
சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 4 மாதங்களிலேயே, திமுக ஆட்சி அமைப்போம் என துரைமுருகன் கூறியுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பொழிக்கரை பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட வைகோ பின்னர்  செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது,

திமுக பொருளாளர் ஸ்டாலின் 89 விரைவில் 92 ஆகும் என கூறி இருப்பது கணிதமேதை ராமானுஜத்தை விட, ஸ்டாலின் பெரிய கணித மேதையாக உள்ளார் என்பதை காட்டுகிறது என்று வைகோ குறிப்பிட்டார்.
மேலும், சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நான்கு மாதங்களிலேயே திமுக ஆட்சி அமைப்போம் என துரைமுருகன் கூறி இருப்பது வேடிக்கையாக இருக்கிறது என்றும் கூறினார்.
தமிழகத்துக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரைக்கூட கர்நாடக அரசு தர மறுக்கிறது.  தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்பதில் கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை என்று சொல்வதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை.
தேவகவுடா பிரதமர் ஆக்கப்பட்டபோது தி.மு.க. ஆதரவு தெரிவித்தது. இப்போது அதே தேவகவுடா தான் தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்கிறார்.
சட்டமன்ற தேர்தல் நடைபெற்று சில மாதங்களே ஆன நிலையில் இன்னும் 4 மாதத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று துரைமுருகன் கூறி இருப்பது பகல் கனவு என்று விமர்சித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை சந்தித்து விட்டு வெளியே வந்து தி.மு.க.வினர் இவ்வாறு பேசுவது மனிதநேய மற்ற செயல் என்றும் காட்டமாக கூறினார்.
தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை விரைவில் 92 ஆகும் என்று ஸ்டாலின் சொல்வது கணித மேதை ராமானுஜரையும் மிஞ்சும்படியாக உள்ளது.
ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பதில் முழு ஆர்வம் கொண்டவன் நான். ஜல்லிக்கட்டின் போது காளைகளுக்கு எந்த காயமும் ஏற்படுவது இல்லை. வீரர்கள் தான் காயமடைகிறார்கள்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சி எடுத்து வருகிறார். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு வருகிற பொங்கல் பண்டிகைக்கு நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மரணமடைந்த முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்ற போது டெல்லியில் ராகுல்காந்தி  கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அஞ்சலி செலுத்துவது என்பது மனிதநேய பண்பு. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்கு உரியது.
இவ்வாறு வைகோ கூறினார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article