அங்காரா
துருக்கி பாகிஸ்தானுடன் தொடர்ந்து நிற்கும் என துருக்கி அதிபர் கூறி உள்ளார்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நட்ந்த தாக்குதலுக்கு பிறகு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு பாகிஸ்தானும் ட்ரோன்கள் மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலை இந்தியா மீது நடத்தியது.
இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் அண்மையில் அளித்த விளக்கத்தில், இந்தியாவிற்கு எதிராக துருக்கியின் Bayraktar TB2 மற்றும் YIHA ட்ரோன்களைப் ட்ரோன்களை பயன்படுத்தி வான் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்து, அந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் போர் பதற்றத்தை குறைத்து இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்பிடம் துருக்கி எந்த காலத்திலும் ஆதரவாக இருக்கும் என துருக்கி அதிபர் உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “கடந்த காலங்களைப் போலவே, எதிர்காலத்திலும் நல்ல காலங்களிலும் கெட்ட காலங்களிலும் நாங்கள் உங்களுடன் தொடர்ந்து நிற்போம்” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக BoycottTurkey என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளப் பயனர்கள் டிரெண்ட் செய்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
[youtube-feed feed=1]