‘ருத்ரன்’ படத்தைத் தயாரிப்பது மட்டுமன்றி, இயக்கவும் செய்கிறார் பைவ் ஸ்டார் கதிரேசன். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சரத்குமார்,நாசர்,பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். K.P.திருமாறன் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுகிறார்.

ஏற்கனவே காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் சரத்குமார் ஆகிய இருவரும் இணைந்து நடித்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இருவரும் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ருத்ரன் திரைப்படம் திரையரங்குகளில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி 2022-ல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழு.