திரைத்துறையில் குரூப் டான்ஸராக நுழைந்து, நடன மாஸ்டராக, அதன்பின் நடிகராக தற்போது இயக்குனராகவும் உயர்ந்து நிற்பவர் ராகவா லாரன்ஸ்.
தற்போது ராகவா லாரன்ஸ் மற்றும் ஜிவி பிரகாஷ் இருவரும் இணையும் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்துள்ளது. 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ருத்ரன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.


தற்போது வெளியான போஸ்டரில் இயக்குனர் பற்றிய விவரம் இடம்பெற வில்லை. இந்த படத்தை அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார் என்ற செய்திகள் திரை வட்டாரத்தில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]