டெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய தூதரக அதிகாரிகளுடன், தூதரக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தூதரக அதிகாரிகளிடன் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்த ரூபி, மாயா மற்றும் பாபி ஆகிய 3 ஹீரோக்களும் பத்திரமாக நாடு திரும்பினர். யார் இந்த ஹீரோக்கள்…

ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்குள்ள மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முன்னாள் அதிபர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில்,  அந்நாட்டில் உள்ள தூதரங்களை இந்தியா,  அமெரிக்க உள்பட பல்வேறு நாடுகள் மூடி வருகிறது.

ஒவ்வொரு நாடும், தங்களது நாட்டு பிரஜைகளை அங்கிருந்து அழைத்துச்செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பலர் தங்களின் நாட்டை விட்டு சென்றுள்ள நிலையில் மேலும் லரும் வெளிநாடுகளுக்கு செல்ல காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். அவர்களின் முகத்தை சோகமே காணப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவும் தனது தூதரகத்தை மூடிவிட்டு, அனைத்து ஊழியர்களையும் பத்திரமாக வெளியேற்றும் முயற்சியில் இறங்கியது. முதல்கட்டமாக ஏர் இந்தியா விமானம் மூலம் முதல் குழுவினர் வந்தடைந்தனர். அதையடுத்து ராணுவ விமானம் மூலம் இந்திய தூதரக அதிகாரிகளை அழைத்தும் வரும் பணி நடைபெற்றது.

காபூல் விமானநிலையம் மூடப்பட்டதால் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்காக சென்றிருந்த வீரர்கள் என பலர் தாயகம் திரும்புவதில், சிக்கல் ஏற்பட்டது. அதன்படி இந்திய தூதர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனிடையே அமெரிக்கா சென்றிருந்த இந்திய வெளியறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் பிளிங்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து , காபூலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான அனுமதி கிடைத்தது.

இதனை அடுத்து தொடர்ந்து இந்தியா விமானப்படை விமானம் காபூலில் இருந்து 120 இந்தியர்களை மீட்டு கொண்டு பத்திரமாக 17ந்தேதி குஜராத் மாநிலத்தை வந்தடைந்தது. இவர்களுடன் தூதரகத்தை பாதுகாத்த வந்த  ரூபி, மாயா, பாபி என்ற 3 முக்கிய நபர்களும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

யார் இந்த ரூபி, மாயா மற்றும் பாபி…..! அவர்கள் வேறு யாருமல்ல. நன்றியுடைய நாய்கள்தான். இந்த நன்றியுள்ள விலங்கு, 3 வருடங்களாக காபூலில் இந்திய தூதரகத்தை பாதுகாப்பதில் முக்கிய பணியாற்றி வந்தது.  இந்த ஹீரோ கடந்த 3 வருடங்களாக காபூலில் இந்தியயர்களை பாதுகாத்தனர்.

இந்த ஹீரோ கே 9 நாய்கள் தூதரகத்தைப் பாதுகாப்பதில் ஒரு சிறந்த வேலையைச் செய்ததாக தூதரக அதிகாரிகள் பாராடியுள்ளனர். தூதரக அதிகாரிகள் அங்கிருந்து புறப்படும்போது, எதையும் விட்டுவிடாமல்,  3 நாய்களையும்  காபூலில் இருந்து ஹிண்டோனுக்கு தங்களுடன் விமானத்தில் கொண்டு வந்தனர்.

ரூபி, மாயா மற்றும் பாபி ஆகிய 3 பேரும்  மூன்று வருடங்களாககு காபூலில் இந்திய பணியைப் பாதுகாத்தனர். அறிவித்தபடி, தூதரகத்தைப் பாதுகாப்பதில் நாய்கள் ஒரு சிறந்த வேலையைச் செய்துள்ளன என்று ITBP கூறியுள்ளது. “மூன்று தைரியமான அன்பர்களும் இந்திய மண்ணைத் தொடுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் மற்றும் நம் தேசத்தின் பழக்கமான காட்சிகள், வாசனைகள் மற்றும் ஒலிகளுக்குத் திரும்புவதாக ள் தெரிவிக்கின்றனர்”  அவர்கள் 3 பேரும்  ITBP சாவல் முகாமை அடைந்தனர் என்று ஐடிபிபி தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து டிவிட்பதிவிட்டுள்ள ITBP DIG S நடராஜன்  “காபூலில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்த 3 ஹீரோக்களும்  பல ஆப்கானியர்களின் உயிர்களைக் காப்பாற்றினர் மற்றும் தூதரக அதிகாரிகளை பாதுகாத்தன் மூலம் அவர்கள் எங்களின் சொந்தங்களாக மாறினர் என்று தெரிவித்துள்ளார்.