டில்லி,

னாதிபதி பிரணாப் முகர்ஜியை ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத் இன்று மதியம் சந்தித்து பேசினார். இது டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த மாதம் 24ந்தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் விதமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேட்புமனு தாக்கல் கடந்த 14ந்தேதி தொடங்கி உள்ளது. இந்நிலையில் ஆளும் பாரதியஜனதா அரசு, ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என எண்ணி எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர்.

ஆனால், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், ஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதா அறிவிக்கும் வேட்பாளரை எதிர்த்து, மாற்று வேட்பாளரை களமிறக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று மதியம்  ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத், தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, குடியரசு தலைவர் மாளிகையில் சந்தித்து பேசினார்.

இது டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜியையே ஆர்எஸ்எஸ் முன்னிறுத்த முயற்சி செய்வதாக தவல்கள் வெளியாகி உள்ளது.