அகமதாபாத்:  குஜராத் மாநிலத்தில் கட்டுப்பட்டுள்ள உலகின் பெரிய ஸ்டேடியமான ‘சர்தார் பட்டேல் ஸ்டேடியம்’ பெயரை  ‘நரேந்திர மோடி ஸ்டேடியம்’ என பெயர் மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபபாய் பட்டேலை  அவமதிக்கும் நோக்கில், பெயரை மாற்றியிருப்பதாக எதிர்க்கட்சி களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்துத்துவா அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாக செயல்பட்டு வரும் மோடி அரசு, ஆர்எஸ்எஸ் தலைவர்களை மகிழ்விக்கும் வகையில், 1948ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடைவிதித்து, அப்போதைய அமைச்சர் வல்லபபாய் பட்டேலை அவமதிக்கும் வகையில், இந்த செயலை செய்துள்ளதாக விமர்சிக்கப்படு கிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா மைதானத்தில், ஏற்கெனவே இருந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு அதிநவீன முறையில் உலகின் மிகப் பெரிய  ஸ்டேடியம் 4 ஆண்டுகளாக கட்டபட்டு, கடந்த 2020ம்ஆண்டு பிப்ரவரியில் திறக்கப்பட்டது.   இதன் திறப்பு நிகழ்ச்சியில்,  அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஸ்டேடியமானது உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் என்பதுடன்,  பகலிரவு போட்டிகளின்போது 4 திசைகளில் இருந்தும் மின்னொளி பரவும் வகையில் அமைக்கப்பட்டது. அத்துடன், மழைநீர் வடிகால் வசதி  உடன், தரமான குடிநீர் வசதியும், மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் வசதியும் ஏற்பட்டுள்ளது.

ரூ.800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் 1,10,000 ரசிகர்கள் அமரலாம். மேலும், 70 கார்ப்பரேட் பாக்ஸ், நான்கு உடை மாற்றும் அறைகள், ஒரு கிளப் ஹவுஸ் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல நவீன வசதிகள் உள்ளன.  அத்துடன்   உள்ளரங்க பயிற்சி ஆடுகளங்கள், நவீன ஊடக அரங்கம், 3000 கார்கள், 10 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மெட்ரோ ரயில் இணைப்பு, 2 சிறிய கிரிக்கெட் மைதானம், இதர விளையாட்டு மைதானங்கள் அமைந்துள்ளன.

இந்த ஸ்டேடியத்தின் திறப்பு விழாவின்போது, மோட்டேரா  ஸ்டேடியத்துக்கு சர்தார் வல்லபபாய் பட்டேல் என பெயரிடப்பட்டது.  ஏற்கனவே குஜராத்தின்ன் சபர்மதி ஆற்றின் மத்தியில் வல்லபபாய் பட்டேலுக்கு உலகிலேயே உயரமான சிலை அமைக்கப்பட்ட நிலையில், இந்த ஸ்டேடியமும் குஜராத் மாநிலத்துக்கு மேலும் பெருமை சேர்ந்துவந்தது.

இந்த நிலையில், தற்போது, மோட்டேரோ  ஸ்டேடியமான சர்தார் வல்லபபாய் பட்டேல் ஸ்டேடியம் மீண்டும் பெயர் மாற்றப்பட்டுள்ளது. அங்கு இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், சர்தார் வல்லபபாய் பட்டேல் ஸ்டேடியம் என்ற பெயரை நரேந்திர மோடி ஸ்டேடியம் என மாற்றப்படுவதாக அறிவித்தார். ‘

இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்வ்ரத், விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோரும் கலந்து கொண்டனர்

கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்  இந்தியா வந்தபோது, அவருக்கு நமஸ்தே டிரம்ப் என்ற பெயரில் பிரமாண்டமான வரவேற்பு, குஜராத் மாநிலம் அகமதாபாதில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய சர்தார் படேல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கொடுக்கப்பட்டது. இந்த ஸ்டேடியத்தில்  1.60 லட்சம் பேர் கலந்துகொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மோடி அரசு, பிரதமர் நரேந்திர மோடி பெயரில் ஸ்டேடியத்தின் பெயரை மாற்றம் செய்துள்ளது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

நாட்டின் தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30ஆம் தேதி பிர்லா பவனில் நடைபெறவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காகசென்றபோது, நாதுராம் கோட்சே என்ற ஆர்எஸ்எஸ் நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். இதையடுத்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

அப்போது சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் சர்தார் வல்லப்பாய் படேல்.  சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர்.

ஆர்எஸ்எஸ் இயக்க நபரால் காந்தி கொலை செய்யப்பட்டதால்,  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அப்போதைய தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் கைது செய்ய உத்தரவிட்ட பட்டேல்,  தொடர்ந்து,  1948-ஆம் ஆண்டு, பிப்.4-ல் ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) இயக்கம் தடை செய்ய அதிரடியாக உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து நாடு முழுவதும ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதை ஒடுக்கி நாட்டில் அமைதியை ஏற்படுத்தியவர் இரும்பு மனிதான வல்லபபாய் பட்டேல்.  இவர் தொடக்க காலத்தில் ஆர்எஸ்எஸ்.க்கு ஆதரவாகவே செயல்பட்டுவந்த நிகழ்வுகளும் நடந்தேறின.  காந்திஜி படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர் லக்னோவில் பேசிய படேல், தேசபக்தி கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நசுக்கும் வகையில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசார் நடந்து கொள்ளக்கூடாது என எச்சரித்திருந்தார்.

ஆனால் காந்தி படுகொலைக்கு பிறகு, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதித்ததுடன்,  இதுதொடர்பான கோரிக்கைகளை புறந்தள்ளி,  ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை விலக்க முடியாது என கூறியதுடன்,  ஆர்எஸ்எஸ் தலைவர்  கோல்வால்கரை சந்திக்க  நாக்பூருக்கே திரும்பிச் செல்லுமாறு கூறினார். இதனால் கோபமடைந்த ஆர்எஸ்எஸ்,பட்டேல் மீது வன்மம் கொண்டது. ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சில அடிப்படை வேற்றுமைகள் இருப்பதாகக் கூறி தடையை விலக்க உள்துறை மறுப்பு தெரிவித்துது.

ஆனால்,  1949 செப்டம்பர் 14ந்தேதி  உள்துறை அமைச்சர் மொரார்ஜி தேசாய் அனுப்பிய கடிதத்தில், ஆர்.எஸ்.எஸ். மீதான தடை தேவையற்றது; எனவே எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் தடை நீக்கப்பட்டது என தெரிவித்தார். 1949-ல் ஆர்.எஸ்.எஸ். எந்த ஒரு உறுதிமொழியும் அளிக்காத நிலையில், தடை நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது குஜராத்தில் அமைக்கப்பட்டு, திறக்கப்பட்ட உலகின் பெரிய ஸ்டேடியமான சர்தார் வல்லபபாய் பட்டேல் ஸ்டேடியத்தை, ஆர்எஸ்எஸ் நெருக்குதலுக்கு பயந்து, பெயரை மாற்றி உள்ளதாகவும், நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.