டில்லி

ர் எஸ் எஸ் அமைப்பின் துணை இயக்கங்கள் மத்திய அரசின் பல திட்டங்களை எதிர்த்து தீர்மானம் இயற்றி உள்ளன.

மத்திய பாஜக அரசு பல திட்டங்களை அறிவித்தது.   அவற்றில் முதலீடுகளை திரும்ப பெறுதல்,  வர்த்தக சீர் திருத்தம் மற்றும் இந்திய வனத்துறை விதி 1927ல் திருத்தங்கள் போன்றவை ஆகும்.   பாஜகவின் தாய் இயக்கம் எனச் சொல்லப்படும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் வனத்துறை பிரிவு வனவாசி கல்யாண் ஆஸ்ரம் ஆகும்.  இந்த இயக்கத்தின் கூட்டம் ஒன்று சமீபத்தில் நடந்தது.

கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களில் நகல் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாதவிடம் அளிக்கப்பட்டுள்ளது.   அதில், “இந்திய வனத்துறை விதி 1927ல் பல திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.  இது குறித்த வரைவுகள் ஆங்கிலத்தில் மட்டும் அளிக்கப்பட்டுள்ளதால் பலருக்கு புரியவில்லை.   அத்துடன் இதற்கான எதிர்ப்பு ஏதும் இருந்தால் தெரிவிக்க மார்ச் 7 முதல் ஜூன் 8 வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நேரத்தில் தேர்தல் நடைபெற்றதால் திருத்தங்களுக்கான எதிர்ப்பு மற்றும் ஆலோசனை வழங்க போதுமான கால அவகாசம் இல்லை.   ஆதலால் இந்த கால அவகாசம் ஜுனில் இருந்து மீண்டும் அளிக்க வேண்டும்.   அது மட்டுமின்றி இந்த சட்டதீர்திருத்தம் அமுலாக்கப்படும் முன்பே இந்த விதிகளை அதிகாரிகள் அமுலுக்கு கொண்டு வந்துள்ளனர்.  இதை உடனடியாக அரசு தடை செய்ய வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் மற்றொரு துணை இயக்கமான பாரதிய மஸ்தூர் சங்க் தலைவர் அரசுக்கு அளித்துள்ள கடிதத்தில், “அரசு பொதுத்துறை மற்ரும் தனியார் துறைகளில் செலுத்தியுள்ள முதலீடுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ள்து.  இதற்கு காரணம் நஷ்டம் என கூறப்படுகிறது.  முதலீடுகளை திரும்ப பெறுவதை விட நஷ்டத்துக்கான காரணங்களை கண்டறிய அர்சு முயல வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் ஸ்வதேசி ஜாக்ரன் மன்ச், “இந்திய அரசு வர்த்தக சீர்திருத்தம் என்னும் பெயரில் பல வெளிநாட்டு பொருட்களுக்கு தீர்வையை குறைத்துள்ளது    இதனால் வர்த்தகர்கள் பயனடைந்தாலும் அதே  பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வோர் கடும் இழப்பை சந்திக்கின்றனர்.   இவ்வாறு 74% பொருட்களுக்கு தீர்வையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.   அவற்றை மத்திய அரசு ஆராய்ந்து மறு தீர்ப்பு அளிக்க வேண்டும்” என கூறி உள்ளது.