நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலைவெங்கடேசன் முகநூல் பதிவு…
ஆர்.எஸ்.மனோகர்..
நாடகக் காவலர் என பெருமை பெற்றவர். இன்று 99 ஆவது பிறந்தநாள். அதாவது நூற்றாண்டு தொடங்குகிறது..
ராஜாம்பாளில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி வில்லனாக மாறியவர். தாய் உள்ளம் 1952) படத்தில் இவர் ஹீரோ. அப்போது ஹீரோ வாய்ப்பு கிடைக்காத, ஜெமினி கணேசன் வில்லன்.
போதையில் பாடுகிற, “அடிக்கிற கைதான் அணைக்கும்” என்ற இவரின் வண்ணக்கிளி(1959) பாடல் என்றைக்குமே மறக்க முடியாது.
அதேபோல வல்லவன் ஒருவன் படத்தில் ஷீலா (சந்திரமுகி- அகிலாண்டேஸ்வரி) பாடும் “அம்மம்மா கன்னத்தில் வைத்து” என்ற பாடலுக்கு ஆர் எஸ் மனோகர் காட்டும் கம்பீரமான அழகு, அவ்வளவு மேன்லியாக இருக்கும்.
மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் ஆஸ்தான வில்லன்.
பி.எஸ் வீரப்பா, நம்பியார், அசோகனுக்கு பிறகு எம்ஜிஆர் படங்களிலும் வில்லன்.
ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண் உலகம் சுற்றும் வாலிபன், ரிக்ஷாக்காரன், இதயக்கனி என எம் ஜி ஆரின் பிளாக்பஸ்டர் படங்களில் எல்லாம் வில்லனாய் அதகளம் பண்ணி இருப்பார்.
மேடை நாடகங்களிலேயே பிரம்மாண்டமான புராண காட்சிகளை அமைத்து சாதனை படைத்தவர்.
தமிழ் சினிமா உலகம் ஆவணப்படுத்தி வைக்க வேண்டிய அளவுக்கு மேடை மற்றும் திரைப்பட வரலாறு கொண்டவர்..