சென்னை:
ன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளர்  இடைக்கால ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த பிப்ரவரி மாதம் கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் மற்றும் சட்டத்துறை செயலாளரான  ஆர்.எஸ்.பாரதி,  நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்திருந்தார். போலும் இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலை ஆலந்தூரில் உள்ள தனது விட்டில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
தகவலறிந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த திமுக எம்.எல்.ஏக்கள், வழக்கறிஞர்கள் ஆர்.எஸ்.பாரதியை பார்க்க அனுமதிக்க கோரி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் வீட்டில் ஆர்.எஸ்.பாரதியை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, ஆர்.எஸ்.பாரதி எனது மகன் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றி வருகிறார். எனக்கு இருமல், சளி இருக்கிறது; எனவே  கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார், ஜூன் 1- ஆம் தேதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.