டெல்லி:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4.30 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுபிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு திட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி,  மின்சார நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி நிதியுதவி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
சுயசார்பு பாரதம்: ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்ளை அறிவித்து வரும் நிதி அமைச்சர், மின்துறை சீர்த்திருத்தங்கள் நாட்டை மின்மிகை நாடாக உருவாக்கியுள்ளது
மின்சாரத் துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக மின்சாரத்தில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது
கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் நாட்டை தன்னிறைவு அடைய செய்துள்ளன.
எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறியுள்ளது
உலகம் முழுவதற்கும் இன்று இந்தியா தான் மருந்துகளை கொடுத்து உதவுகிறது
மின்சார விநியோக நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.