வுலி, உத்தரகாண்ட்

த்தரகாண்ட் மாநிலம் அவுலியில் நடந்த மோசடி மன்னன் குப்தாவின் குடும்ப திருமணத்தின் 275 குவிண்டால் குப்பையை அள்ள அரசு ரூ.8 லட்சம் கட்டணம் விதித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமட் நகராட்சியை சேர்ந்த அவுலியில் செல்வந்தரான குப்தா என்பவரின் குடும்பத் திருமணம் நடந்துள்ளது. சவுத் ஆப்ப்ரிக்காவில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியரான குப்தாவின் மீது பலநிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சவுட் ஆப்ரிக்கா நீதிமன்றம் இவருக்கு அபராதம் அளித்துள்ளது. இவர் ஒரு தேடப்பட்டு வரும் குற்றவாளி ஆவார்.

அவுலியில் நடந்த குப்தாவின் குடும்ப திருமணத்துக்கு பல லட்சம் பேர் வந்துள்ளனர். ஏராளமான பந்தல் மற்றும் மலர் அலங்கரங்களுடன் இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இந்த திருமணத்தின் குப்பை மட்டும் சுமார் 275 குவிண்டால் அளவுக்கு சேர்ந்துள்ளது.  இந்த குப்பையில் மலர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் கவர்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள் ஆகியவை உள்ளன.

இவைகளை நகராட்சி தொழிலாளர்கள் எடுத்துப் போட முடியாமல் திணறி உள்ளனர். குப்பை மிகவும் அதிகமாக உள்ளதாக அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து ஜோஷிமட் நகராட்சி தலைவர் சைலேந்திரா பவார், “முதலில் இந்த திருமணக் குப்பைகளை இரண்டு அல்லது மூன்று தொழிலாளர்கள் மூலம் அகற்ற திட்டமிட்டோம். ஆனால் மலை போல் குவிந்துள்ள இந்த குப்பைகளை அள்ள 20 தொழிலாளர்களும் 4 டிரக்குகளும் தற்போது ஈடுபடுத்தி உள்ளோம். இந்த திருமணம் ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை நான்கு தினங்கள் நடந்துள்ளது.

இந்த அதிகப்படியான செலவுக்காக குப்தாவின் குடும்பத்தினரிடம் இருந்து ரூ.8 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. இதை அளிப்பதாக குப்தாவின் குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன் சுமார் ரூ.12 லட்சம் மதிப்புள்ள குப்பை வண்டி ஒன்றையும் அவர்கள் அன்பளிப்பாக தருவதாக சொல்லி உள்ளனர்.’ என தெரிவித்துள்ளார்.