டில்லி,

ரசியல் கட்சிகளுக்கு கடந்த 4 ஆண்டில் ரூ.957 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு ( Association for Democratic Reforms) அறிக்கை தெரிவித்து உள்ளது.

இதில் பாரதியஜனதாவுக்கு மட்டும் 706 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சியினரிடைய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் கட்சியினருக்கு பெரும் தொழிலதிபர்கள், நிறுவனங்கள் நன்கொடை கொடுப்பது வழக்கம். ஆனால், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்றால், அதனை அரசியல் கட்சிகள் குறிப்பிட வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் விதிமுறை உள்ளது.

இதில் பலகோடி ரூபாய் பான் எண் விவரங்கள் இல்லாமலே பெறப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் நன்கொடையாளர் பற்றிய விவரமே இல்லாமல், அரசியல் கட்சிகளுக்கு பல கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம்  ஜனநாயக சீர்திருத்த அமைப்பு  தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை மொத்தம் 1,070,68 கோடி என்றும், இதில் 956.77 கோடி தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்தும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிக பட்சமாக பாரதியஜனதாவுக்கு  2987 நிறுவனங்களிடம் இருந்து 705.81 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது என்றும்,  காங்கிரசுக்கு 198.16 கோடி மட்டுமே நிதியாக கிடைத்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிதிகளில்ர,  60 சதவீத தொகை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளத.

காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட 5 அரசியல் கட்சிகள் இந்த நன்கொடைகளைப் பெற்றுள்ளன.

சரியான கணக்குகள் இல்லாமல்,  பாரதியஜனதாவுக்கு அதிகரித்து வரும் நிதி குறித்து எதிர்க்கட்சி யினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.