சென்னை: வேப்பேரி சூளை பகுதியில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியில் வந்த திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான காரில் ரூ. 60லட்சம் பணம் கட்டுக்கட்டாக இருந்தது தெரிய வந்தது.
இந்த பணத்துக்கு முறையான ஆவணங்கள் இல்லாத நிலையில், காருடன் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், அந்த கார் திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. மேலும், ஜெகத்ரட்சனின் மதுபானம் தயாரிப்பு ஆலையான Accord Dislaries Private limited என்ற பெயரில் இருந்ததும், அந்த ஸ்கார்பியோ காரில், அஸ்வந்த் குறும்பன் என்பவர் ஆவணமின்றி ரூ 50 லட்சம் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவத்தன்று, சென்னை, சூளை, கோபால் தெரு அருகே பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது PY05 VD 0345 என்ற பதிவெண் கொண்ட ஸ்கார்பியோ வாகனம் வந்துள்ளது. அதனை மடக்கி சோதனை செய்தபோது கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி பணம் கொண்டு வந்ததால் பணத்தையும் வாகனத்தையும் பறிமுதல் செய்து வேப்பேரி காவல் நிலையம் எடுத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் பணத்தை எடுத்து வந்தவர்கள் அஸ்வந்த் (34), குறும்பன் (31) என்பதும், இவர்கள் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான Accord Dislaries Private limited என்ற மதுபான நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர் என்பதும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனமும் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான நிறுவனத்தின் வாகனம் என்பதும் தெரியவந்தது. மேலும், கணக்கில் வராமல் கொண்டு சென்றது ரூபாய் 50 லட்சம் என்பதும், அதற்குரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனால், பறிமுதல் செய்த பணத்தை வேப்பேரி போலீசார் எழும்பூர் கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
[youtube-feed feed=1]