மகாராஷ்டிர மாநிலத்தில் ரயில்வேயில் பணி புரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவுக்கு கடந்த மே மாதம் 30 ஆம் தேதி உயிர் இழந்தார்.
அவருக்கு 60லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த பணத்துக்கு உரிமை கொண் டாடி அவரது மனைவி, ரயில்வேயில் மனு அளித்தார்.
ஆனால், இன்னொரு பெண்ணும், ’’இறந்த சப்-இன்ஸ்பெக்டர் எனது கணவர். எனவே இழப்பீட்டை எனக்கு தர வேண்டும்’’ என ஏற்கனவே மனு செய்திருந்தார்.
விசாரணை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு இரு மனைவிகள். ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவரை திருமணம் செய்திருந்தார்.
இரண்டு திருமணங்களும், இந்து திருமண சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருந்தது.
முதல் மனைவியை 1992 ஆம் ஆண்டும், இரண்டாம் மனைவியை 98ஆம் ஆண்டும் திருமணம் செய்திருந்தார்.
இரு மனைவியருக்கும் ஆளுக்கொரு மகள் உள்ளனர். இந்த விவகாரங்கள் தெரிய வந்ததும், இரண்டாம் மனைவியின் மகள் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சப்- இன்ஸ்பெக் டரின் இழப்பீட்டு பணத்தை நான்காக பங்கிட்டு – முதல் மனைவி, முதல்மனைவியின் மகள், இரண்டாம் மனைவி, அவளது மகள் ஆகியோருக்கு -சமமாக வழங்க வேண்டும்’’ என அவர் கோரி இருந்தார்.
இதனை நீதிமன்றம் ஏற்கவில்லை.
’’ இழப்பீட்டு பணத்தில் இரண்டாம் மனைவிக்கு பங்கு கிடையாது. அவரது மகள், முதல் மனைவி, அவரதுமகள் ஆகிய மூவருக்கும் வழங்கலாம்’’ என கருத்து தெரிவித்த நீதிமன்றம் பின்னர் இன்னொரு ஆணையை பிறப்பித்தது.
இந்த வழக்கில் முதல் மனைவி இரு நாட்களில் தனி மனு தாக்கல் செய்ய வேண்டும், அவர் தனக்கு தனி வழக்கறிஞரை நியமித்து வாதாட வேண்டும். முந்தைய வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படை யில்,இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும்’’ என உத்தரவிட்ட நீதிமன்றம், சப்-இன்ஸ்பெக்டரின் இழப்பீட்டு பணத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும்’’ என்றும் ஆணையிட்டது.
தீர்ப்பு எப்படி இருக்கும்?
இரண்டாவது மனைவிக்கு பங்கு கிடைக்குமா?
மகாராஷ்டிர மாநிலமே ஆவலோடு காத்திருக்கிறது.
-பா.பாரதி.