சென்னை: அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5000 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழகம் முழுவதிலும் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குமாறு அங்கன்வாடி மையங்களுக்கு தமிழக அரசு கடந்த ஜூன் 30ந்தேதி உத்தரவிட்டது. இதனால் ஏற்கனவே அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் எல்கேஜி,யுகேஜி வகுப்புகளின் நிலை கேள்விக்குறியாது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஏற்கனவே செயல்படும் பள்ளிகளில் தொடர்ந்து எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கியும், அதில் பணியாற்றி ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யவும் அனுமதி அளித்து  தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது.