சென்னை: பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.5000 பரிசுதொகை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூறிய அமைச்ச்ர ஐ.பெரியசாமி முதலமைச்சர் ஸ்டாலின் நல்லதையே செய்வார் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு அரசு தைத்திருநாளில் வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, பொங்கலின்போது மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக முதலமைச்சர் சரியாக செய்வார் எனவும், மக்களுக்கு எந்த விதமான குறைகளும் இல்லாமல் நல்லபடியாக பார்த்துக் கொள்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால், திமுக அரசு மக்களை கவரும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்புடன், செலவுக்கு குறிப்பிட்ட தொகை வழங்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
. திண்டுக்கல் மாவட்டத்தில் கல்நாட்டான்பட்டி, சீவல் சரக்கு நெசவாளர் காலனி, அம்பாத்துரை அமளி நகர், பிள்ளையார் நத்தம் மாதா நகர் ஆகிய பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்பாது, எடப்பாடியின் பொங்கல் பரிசு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் கூறி யஅமைச்சர், பொங்கல் பரிசு ரூ.5000 வழங்குவது தொடர்பாக, முதலமைச்சர் தான் முடிவெடுப்பார். மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தமிழக முதலமைச்சர் சரியாக செய்வார். மக்களுக்கு எந்த விதமான குறைகளும் இல்லாமல் நல்லபடியாக பார்த்துக் கொள்வார்.” என்றார்.
பின்ன்ர, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற 2026 தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, அவருக்கு 210 தொகுயிலும் அவர் போட்டியிட இடம் இல்லை என்றவர், அதிமுக போட்டியிட 210 தொகுதி எங்கு இருக்கிறது. தமிழகத்திலுள்ள 210 தொகுதியில் மீதம் 24 தொகுதி உள்ளது. 24 தொகுதியில் வேண்டுமானால் அவர்கள் பெற முடியும் என்றார்.
முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்பைதான் நிறைவேற்றுகிறார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். மகளிர் உரிமைத் தொகை எங்களது தலைவர் எந்தத் திட்டத்தை அறிவித்தாலும் நிரந்தரமான திட்டத்தை அறிவித்து அதை தொடர்ந்து செயல்படுத்துவார்கள். உதாரணம் மகளிர் உதவி தொகை திட்டம். முதலில் ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கினார்கள். விடுபட்ட போனவர்களுக்கும் மீண்டும் வழங்கப்படும் எனக் கூறினார்.
நாளை மாலை 25 லட்சம் பேருக்கு வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது. இப்போது உதவி திட்டம் வழங்கப்படுபவர்களை சேர்த்தால் ஒரு கோடியே 40 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. மகளிர் உரிமைத் தொகை தகுதியுள்ள அனைவருக்கும் நாளை மாலை வீடு தேடி பணம் வரும்” என்றார்.
[youtube-feed feed=1]