திருவனந்தபுரம்:

கல்லாடா டிராவல்ஸ் மீது 2108 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் இருப்பதாகவும், ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் அபராதத் தொகை நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த வாரம் கல்லாடா டிராவல்ஸ் ஊழியர்கள் கொச்சியில் 3 பயணிகளை தாக்கியுள்ளனர்.
பைக்கில் விரட்டி வந்த கும்பல் பயணிகள் மீது மோதி பீர் பாட்டில்களால் தாக்கிய சிசிடிவி கேமிரா பதிவுகள் கிடைத்துள்ளன.

இந்த கும்பலால் தாக்கப்பட்டவர்களில்  2 கல்லூரி மாணவர்களும், ஒரு நடுத்தர வயதினரும் அடங்குவர்.
தாக்கப்பட்ட பயணி ஒருவர் இந்த தாக்குதலை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

போலீஸார் வராவிட்டால், கல்லாடி டிராவல்ஸின் ரவுடி கும்பல் எங்களை கொன்றிருக்கும் என்கிறார் தாக்கப்பட்டவர்களில் ஒருவரான சச்சின்.

இதனையடுத்து மராடு போலீஸார் அந்த கும்பலைச் சேர்ந்த 7 பேரை கைது செய்னர்.

உடல் நலத்தைக் காரணம் காட்டி, கல்லாடா டிராவல்ஸ் உரிமையாளர் சுரேஷ் கல்லாடா போலீஸார் முன்பு ஆஜராக மறுத்துவிட்டார்.
இதனையடுத்து அவரிடம் போன் மூலம் பெற்ற வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்தனர்.

இது குறித்து கேரள போக்குவரத்து ஆணையர் சுதேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, போக்குவரத்து விதிகளை மீறியதாக, கல்லாடா டிராவல்ஸின் 46 பேருந்துகளுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மொத்த தொகை ரூ.2 லட்சத்து 30 ஆயிரமாகும்.

1998-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின்படி, குறிப்பிடப்பட்ட வேகத்துக்கு அதிகமாக வாகனங்களை இயக்கினால், ரூ.400 அபராதம் விதிக்கப்படும்.
அதன்பிறகும் தொடர்ந்து வேகமாக இயக்கினால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில், கேரள போக்குவரத்து ஆணையர் சுதேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, போக்குவரத்து விதிகளை மீறியதாக, கல்லாடா டிராவல்ஸின் 46 பேருந்துகளுக்கும் தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மொத்த தொகை ரூ.2 லட்சத்து 30 ஆயிரமாகும்.

 

கடந்த 2013-ஆண்டிலிருந்து  அபராதத்தை கல்லாடா டிராவல்ஸ் கட்டவில்லை. கல்லாடா டிரவாவல்ஸ் மீது கடந்த 6 ஆண்டுகளில் 2108 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

1998-ஆண்டு மோட்டார் வாகன சட்டத்தின்படி, குறிப்பிடப்பட்ட வேகத்துக்கு அதிகமாக வாகனங்களை இயக்கினால், ரூ.400 அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும் தொடர்ந்து வேகமாக இயக்கினால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்றார்.