கோவை:
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு 6 கட்டமாக ஜூலை 31ந்தேதி வரை நிட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், தொற்று பரவல் தீவிரமடைந்துதான் வருகிறது.
கொரோனா எச்சில் மூலம் பரவி வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப் பட்டு வருகிறது.  இந்த நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்ப தடை விதித்துள்ள பல மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்துள்ளது,  தடையை  மீறி சாலையில் எச்சில் துப்பினால் ரூ.1000 வரை  அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி பகுதிகளில் எச்சல் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவை மாநகராட்சி ஆணையர் இந்த உத்தரவை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம்,  “பொது இடங்களில் எச்சில் துப்புவது தடுக்கப்பட வேண்டும் என்றும்,  துப்புபவர்களுக்கு அபராதம் விதித்து கட்டுப்படுத்த வேண்டும்,  மதுபானம், குட்கா, புகையிலை போன்றவற்றை விற்பனை செய்வதற்கு கடுமையான தடை விதிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.