டெல்லி:
சுகாதாரத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ரூ.50 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து உள்ளார்.
கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் காலம் நேரம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களை ஊக்கும்விக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றனர்.
அதன்ஒரு பகுதியாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கொரோனாவுக்கு எதிராக பணியாற்றி வரும், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார்.
மேலும் விவசாயிகள் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளர்.