சென்னை; ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பாஜகவைச் சேர்ந்த பிரபல யுடியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாஜக ஆர்வலர்  கார்த்திக் கோபிநாத். தீவிர வலதுசாரி சார்புடைய அவர்  யுடியூபில் திமுகவுக்கு எதிராகவும், பாஜகவுக்கு ஆதரவாகவும் கருத்துக் களை தெரிவித்து வருகிறார். அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்த போது அவரை கார்த்திக் கோபிநாத் நேரில் சந்தித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில், கார்த்திக் கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பமுடுகிறது. கார்த்திக்  அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயிலை புனரமைப்பதாகக் கூறிஇணையதளம் வாயிலாக மக்களிடம் வசூலில் ஈடுபட்டு வந்ததாகவும், ரூ50 லட்சத்துக்கு மேல் வசூலித்து மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டு உள்ளது. புகார் கொடுத்தது யார் என்ற விவரம் வெளியாகவில்லை.

அரசு அனுமதி பெறாமல் வசூலித்ததாக மட்டுமே கூறப்பட்டுள்ளது. அவரை ஆவடி போலீஸார்கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர். கார்த்திக் கோபிநாத் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.