டெல்லி:
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் தங்குவதற்கு சரியான இடம் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ஒதுக்கப்பட்ட நிதி ரூ.50லட்சம் பிரதமரின் கொரோனா நிதிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதற்கும், எய்ம்ஸ் ரெசின்டன்சியல் மருத்துவர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்து உள்ளது.
இந்த சங்கத்தின் சார்பில் கடந்த 13ந்தேதி (மார்ச் 13, 2020) எய்ம்ஸ் பணியாற்றும் எங்களுக்கே கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பு உபகரணங்கள் இல்லையே, அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கடிதம் எழுதி இருந்தது.
பின்னர், கடந்த 24ந்தேதி ((மார்ச் 24, 2020), எங்களை குடியிருப்பாளர்கள் வீடுகளை காலை செய்யக் சொல்கிறார்கள், இதை தடுங்கள் என்று கடிதம் எழுதி இருந்தனர்.
இந்த நிலையில், தற்போது, எய்ம்சில் பணியாற்றும் டாக்டர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், கொரோனாவை தடுக்கும் வகையில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்கான நிதியை, பிரதமரின் கொரோனா நிதிக்கு மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளது.
எய்ம்ஸ் நிர்வாகம் மற்றும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு (சி.எஸ்.ஆர்) பிரிவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாரத் டைனமிக்ஸிலிருந்து 50 லட்சத்தை பி.எம்-கேர்ஸ் நிதிக்கு திருப்பி அனுப்பியதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) குடியுரிமை மருத்துவர்கள் சங்கம் (ஆர்.டி.ஏ) குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிதி தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ) வாங்குவதற்கான முதலில் ஒதுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் பயண நேரத்தைக் குறைப்ப தற்கான அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், அவர்கள் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக கடந்த புதன்கிழமை தாங்கள் நிர்வாகத்திடம் அதிருப்தி தெரிவித்ததாகவும், அனைத்து தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களும் சுகாதார அமைச்சகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் வலியுறுதியதாகவும் தெரிவித்து உள்ளது.
இதற்கிடையில், ஐதராபாத்தில், காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மீது அண்மையில் நடைபெற்ற தாக்குதல் நடத்தியது குறித்தும் கடிதம் எழுதி உள்ளது.