சென்னை:

ங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஅறிவித்து உள்ளார்.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து. அதுபோல அதுபோல 4×400 தொடர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக்ததை சேர்ந்த ஆரோக்கிய ராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

பதக்கம் வென்றவர்களுக்கு தமிழகமுதல்வர் உள்பட அனைத்து அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தமிழகம் திரும்பிய கோமதி மாரிமுத்துக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

அதுபோல, தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் தங்கமங்கை கோமதிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அறக்கட்டளை தரப்பில் இருந்து ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,. பொருளாதார ஆதரவு இல்லாமல் கடுமையான உழைப்பின்மூலம் பதக்கத்தை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த தமிழக வீராங்கனைக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் பாராட்டு தெரிவிப்பதாகவும், அவரை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.