சென்னை: மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அமைச்சர் வேலு சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று = வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொடர்பான மானியக் கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்றன.
பேரவையில் இன்று, மதுரையில் மேம்பாலத்தின் கட்டுமானம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான விவகாரம் குறித்து ப சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது
இதற்கு பதில்அளித்து பேசிய பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசிய அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் பணிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.
மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு, பளுதூக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமே என்றும் , இந்த விபத்திற்கு பொறியாளர்களின் கவனக்குறைவே முழுக்காரணம் என விளக்கமளித்துடன், விபத்தில் உயிரிழந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளி ஆகாஷ் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.