காஞ்சிபுரம்

ரும் திங்கள் அன்று  காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு ரூ 5 கோடி மதிப்பிலான நவரத்தின கற்கள் பதித்த நகைகள் சாற்றப்பட உள்ளன.

இந்தியாவில் முப்பெரும் தேவியர் என பெயர் பெற்ற கோவில்கள், காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி மற்றும் காஞ்சிபுரம் காமாட்சி ஆகிய கோவில்கள் ஆகும்.   இதில் மதுரை மற்றும் காஞ்சிபுரம் தமிழகத்தில் அமைந்துள்ளன.  காஞ்சிபுரம் சென்னைக்கு வெகு அருகாமையில்  உள்ளது.

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தங்கக் கிரீடத்தில் இருந்து பாதம் வரை தங்கம், வைரம், வைடூரியம் என அனைத்து நவரத்தின கற்கள் பதித்த நகைகளை அளித்துள்ளார்.  இதன் மொத்த மதிப்பு ரூ. 5 கோடி ஆகும்.   இந்த நகைகள் வரும் திங்கள் அன்று காஞ்சி சங்கர மடத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.

இந்த ஊர்வலத்துக்கு காஞ்சிபுரம் சங்கர மட பீடாதிபதி விஜயேந்திரசரஸ்வதி சாமிகள் தலைமை தாங்க உள்ளார்.   பிறகு அவர் காமாட்சி அம்மனுக்குத் தனது கரத்தாலேயே நகைகளைச் சாற்ற உள்ளார்   இதையொட்டி ஞாயிற்றுக் கிழமை முதல் கும்பகோணம் தினகர சர்மாவால் தீர்த்த ஜபம் மற்றும் ஹோமங்கள் நடைபெற்று அவை திங்கள் மதியம் முடிவடைகின்றன